தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு என்பது ஆறு மாதத்திற்கு ஒரு முறை நடைமுறைக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த மின்கட்டண உயர்வால் மக்கள் பலர் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று ஜூலை 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இன்று காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேலும், சமீபகாலமாக நடக்கும் கள்ளச்சாராய விற்பனை கொலை கொள்ளை உள்ளிட்டவற்றை கண்டித்தும் சட்டம் ஒழுங்கு சீர் பெற்றுள்ளதாகவும் கூறி போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட உள்ளனர்.
மின்கட்டண உயர்வுக்கு எதிராக ஏற்கனவே பாமக சார்பில் சமீபத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் மின்கட்டணம் உயருமா இல்ல இறங்குமா? என்ற யோசனையில் இருக்கின்றனர்.