தமிழகத்தில் விவசாயிகளுக்கு பல்வேறான நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்ற நிலையில் தற்போது பயிர்களிடம் மற்றும் பயிர் கடனுக்கான மானியம் வழங்கப்பட்டது நிலையில் இப்போது மின்மோட்டார் பொறுத்து இருக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது..
விவசாயத்திற்காகவும் விவசாய நிலத்திற்காகவும் பயனடையும் வகையில் புதிய மின்மோட்டார் பொருத்த விரும்பும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு 50% மானியத்தில் வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது, இந்த மானியத்தை பெறுவதற்கு விவசாயிகளுக்கு ஐந்து ஏக்கரில் விவசாய நிலம் வேண்டும் மேலும் ஆதிதிராவிட ர் மற்றும் பழங்குடியினருக்கு மற்றும் சிறுகுறி விவசாயிகளுக்கு இந்த திட்டம் முன்னுரிமை தருகிறது, இந்த திட்டத்திற்கு ரூபாய் 7 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு, மேலும் விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொண்டு இலவச மானியத்தில் மின் மோட்டார்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது, மேலும் விவசாயிகள் மின்மோட்டார் பொருத்துவதற்கு இ சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது, விவசாயிகள் இச்செய்தியின் மூலம் மகிழ்ச்சி அடைந்தனர்..!!




