• September 24, 2023

மியான்மரில் அவசர நிலை நீடிப்பு..!! தேர்தலை ஒத்திவைத்த ராணுவம்..!!

மியான்மரில் அவசர நிலை நீடிப்பு. தேர்தலை ஒத்திவைத்த ராணுவம். 

2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் நாள் மியான்மரில் பொது தேர்தலில் முறைகேடு நடந்ததாக தெரிவித்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட சில முக்கிய தலைவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது பொது தேர்தல் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் என ராணுவ ஆட்சி உறுதி அளித்ததிருந்தது. இந்த நிலையில் மியான்மரில் நாலாவது முறையாக  அவசரநிலை நீட்டிக்கப்படுவதாக ராணுவம் அறிவித்திருக்கிறது.

மேலும் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, சுதந்திரமாகவும் நியாயமாகவும் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் தேர்தலை நடத்துவதற்கும் போதுமான அளவு பாதுகாப்பு தேவைப்படுகிறது. அதனால் அவசர கால சட்டத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறது.

ராணுவம் தேர்தலை தள்ளி வைத்ததற்கு நாட்டில் நடைபெறும் வன்முறையே காரணமாக கொண்டுள்ளது. ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹவேயிங் தெரிவித்த போது நாட்டின் சில மாநிலங்களில் நடக்கின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் தேர்தல் நடத்த முடியாது. வருகின்ற தேர்தல்களை அவசரமாக நடத்தக்கூடாது என்பதால் எங்களுக்கு சிறிது அவகாசம் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Read Previous

ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்..!! 6 பேர் உயிரிழப்பு..!!

Read Next

கொரோனாவின் அடுத்த அலை..? அமெரிக்காவில் அதிகரிக்கும் தொற்று பரவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular