
மியான்மரில் கடந்த சில நாட்களாக நிலநடக்கம் அதிகளவில் பாதித்து வருகிறது என்று நாம் அனைவருக்கும் மிகவும் நன்றாக தெரியும். அதனால் பல பேர் உயிரிழந்தும் காணாமல் போயும் காயமடைந்தும் இருக்கின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களில் ஒரு பெரிய கட்டிடம் இடிந்து விழுவது போலும் அடுக்குமாடி குடியிருப்பில் மேல் உள்ள நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீர் வெளியேறியதை போன்ற வீடியோக்களை அதிகமாக பார்த்தோம்.
இந்நிலையில் மியான்மறை பற்றி ஒரு முக்கிய செய்தி இப்போது வெளியாகியுள்ளது. அதாவது மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3455 பேர் உயிரிழந்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் 30 லட்சத்திற்கு மேலானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனிடையே மியான்மரில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் 30 லட்சத்திற்கும் மேல் மக்கள் புலம்பெயர்ந்து வருவதாகவும் 2 கோடி பேருக்கு உதவி தேவைப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ஐநா சபை தெரிவித்துள்ளது. இதனால் பல நாடுகள் மியான்மருக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவிலிருந்து 442 மெட்ரிக் டன் உணவுகள் அனுப்பப்பட்டுள்ளது.