மிஸ்டர் அண்ட் மிஸஸ்.. மீண்டும் ராபர்ட் மாஸ்டருடன் இணையும் வனிதா.! ஏன்..? வைரல் புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘‘சந்திரலேகா” என்கின்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் வனிதா. அதனைத் தொடர்ந்து சில படங்களிலேயே நடித்த அவர் மீண்டும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார்.

அதன் பின் அவர் “குக்கு வித் கோமாளி” நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனது சமையல் திறமையால் அசத்தினர். தொடர்ந்து வனிதா சினிமா வாய்ப்புகள், பிசினஸ் மற்றும் யூடியூர் சேனல்கள் என பிசியாக இருந்து வருகின்றார். நடிகை வனிதா சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அவர் மூன்று முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

இதற்கிடையே அவர் நடிகரும், நடன இயக்குனருமான ராபர்ட் மாஸ்டருடன் காதல் உறவிலிருந்த தகவலும், புகைப்படமும் இணையத்தில் பரசியது. கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த “எம் ஜி ஆர், சிவாஜி ,ரஜினி, கமல்” என்ற படத்தை நடிகை வனிதா விஜயகுமார் தயாரிக்க ராபர்ட் மாஸ்டர் இயக்கியிருந்தார். மேலும் இருவரும் இணைந்து அப்படத்தில் நடித்தும் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து “மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ்” என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். அவர்களுடன் ரவிகாந்த், சகிலா, பிரேம்ஜி, சுனில் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு பூஜை போட்டு படப்பிடிப்பு தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Read Previous

நடிகர் விஜய், தனுஷ், திரிஷாவிற்கு மருத்துவ பரிசோதனை செய்யுங்க..!! பாடகி சுசித்ரா விவகாரம்.!!சீறிய வீரலட்சுமி..!!

Read Next

கடைசி ஆப்ஷன்.!! கிளிக் செய்தால்..!! அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து போட்டுடைத்த தேவிபிரியா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular