
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கொங்கு நகரைச் சேர்ந்தவர், வீரா.சாமிநாதன், இவர் கொங்கு நகரில் திமுக, தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு மற்றும் தோட்டத்தில் உள்ள பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை தொடர்ந்து, திமுக முக்கிய பிரமுகர்கள் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் என்று கூறப்படும் இவரது வீட்டில் தற்போது அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திமுக கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.