
வெஸ்ட் இண்டீஸ்-ஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் ஸ்டீவ் ஸ்மித், காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில், காயத்தில் இருந்து குணமடைந்துள்ள ஸ்மித், வரும் 3-ம் தேதி தொடங்க உள்ள 2-வது டெஸ்ட்டில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.