சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் இல்லாத அளவிற்கு மோசமாக விளையாடி வருகிறது. நடந்து முடிந்த ஐந்து போட்டிகளில் நாலு போட்டிகளில் தோல்வி பெற்று பரிதாபமான நிலையில் இருக்கிறது. மேலும் சென்னை அணி அடுத்து என்ன செய்யப் போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு இப்போது ஒரு புது குண்டு வந்துள்ளது. அதாவது ராஜஸ்தானில் சென்னை அணி விளையாடிய போது துசார் தேஷ்பாண்டே போட்ட பந்து ருத்ராஜ் கையில் வந்து மோதியது.
அன்றே அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாடியதால் அதை நாம் பெரிதும் கவனத்தில் கொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை அணியின் கோச் ஸ்டீபன் பிளமிங் ருத்ராஜுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அவர் அந்த காயத்தோடு தான் இரண்டு போட்டிகளில் விளையாடியதாகவும், இப்போது அந்த காயம் பிராக்சர் ஆக மாறி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதனால் ருத்ராஜ் இந்த தொடரில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் சென்னை அணியின் இளம் விக்கெட் கீப்பர் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி அவர்கள் இனி கேப்டனாக இருப்பார் என்று அவர் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் ஆர்வத்துடன் சோகத்துடனும் இருக்கின்றன.




