தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணத்தால் கேரளாவில் உள்ள வயநாட்டு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது இதில் 300-க்கும் மேற்பட்ட உயிர்கள் இறந்து உள்ளதை தொடர்ந்து.
மீண்டும் கேரளாவிற்கு ஆரஞ்சு அலர்ட்டு விடப்பட்டுள்ளது, இன்று முதல் தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு ஆகஸ்டு 13ஆம் தேதி வரை கனமழை இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வந்த நிலையில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் சில இடங்களில் பரவலான முறையில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் தெரியும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது, மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் மழை பெய்யும் என்று தெரிவித்தனர்..!!