இன்றைய காலகட்டங்களில் பலரும் இரவு நேரத்தில் மீதம் வைத்துள்ள உணவை காலையில் சூடு படுத்தி சாப்பிடும் பழக்கம் உண்டு, அப்படி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் கெடுக்கிறது..
நஞ்சாகும் உணவுகள் : ஃப்ரிட்ஜில் வைத்து உணவுகளை மறுநாள் எடுத்து சூடு படுத்தி சாப்பிடுவதனால் நமது உடல் ஆரோக்கியமின்றி செயல்படுகிறது, அடிக்கடி இரவில் மீதமுள்ள உணவை காலை நேரத்தில் சூடு படுத்தி சாப்பிடும் போது வாந்தி, வயிற்றுபோக்கு,தலைவலி மற்றும் புற்றுநோய், இதய நோய் போன்றவைகள் உண்டாகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், கீரை போன்ற உணவுகளை சூடு படுத்தி சாப்பிடும் போது அதில் உள்ள நைட்ரேட்ஸ் (நைட்ரைடாக) மாறி உடலில் விஷத்தன்மையை உண்டு பண்ணி இதனால் புற்றுநோய் உண்டாகிறது, முட்டையை மீண்டும் சூடு பிடித்து சாப்பிடும் போது செரிமான கோளாறு மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது, காலானை மறு முறை சூடு பண்ணும் போது விஷத்தன்மை வாய்ந்ததாக மாறுகிறது இதனால் உடலில் பல செரிமான பிரச்சனைகள் மற்றும் வாந்தி குமட்டல் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது, பீட்ரூட் மற்றும் சிக்கன்களை சூடுபடுத்தி சாப்பிடும் போது உடலில் எதிர்ப்பு சக்திகளை குறைத்து உடல் சோர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது, பொரித்த மற்றும் சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெய் மறுமுறை பயன்படுத்தும் போது அது உடலுக்கு புற்றுநோயை உண்டாக்கும் மேலும் உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைத்து அல்லது ஒரு முறை பயன்படுத்திய பிறகு மீண்டும் சுருபடுத்துவதனால் உடலின் ஆரோக்கியம் வளர்ச்சியை மாற்றமடைகிறது..!!