மீண்டும் சென்னை விமான நிலையத்தில் பதட்டம்..!! ஐந்தாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்..!!

சமீப காலமாகவே சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். கடந்த இரண்டாவது வாரத்தில் ஐந்தாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விமான சேவை  செயல்பட்டு வருகின்றது. சென்னை விமான நிலையத்தில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு இன்று அதிகாலை இமெயில் மூலம் சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மெயில் ஒன்று வந்தது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு குழுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த உயர் அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. மேலும் விமான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள் வெடிகுண்டுகளை கண்டறியும் குழுவினருடன் காவல்துறை உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கு கொண்டனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் கண்காணிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கையில் “சென்னை விமான நிலையத்திற்கு கடந்த இரண்டு வாரங்களாக ஐந்து முறை வெடிகுண்டு மிரட்டல் தொடர்ச்சியாக வருகிறது. இதுவரை தொலைபேசி மற்றும் இமெயில் மூலமாக ஐந்தாவது முறையாக மிரட்டல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வெடிகுண்டு மிரட்டல் புரளியாக இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் விமான சேவைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல இயக்கம் செய்யப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கும் சமூக விரோதிகளை விரைவில் காவல்துறையினர் கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்”, என அவர் தெரிவித்துள்ளார்.

Read Previous

கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 இலட்சம் நிவாரணம் அறிவிப்பு..!! தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்..!!

Read Next

தமிழகத்தில் வாட்டி வதைத்த வெயிலுக்கு முடிவு..!! அடுத்த ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!! சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular