
திமுக தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய விசிக உறுதுணையாக இருக்கும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெறும் முதலமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திருமாவளவன், “நாட்டில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கே பாதுகாப்பில்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளார்” என்று கூறியுள்ளார்.