சென்னை மாநகரத்தில் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் பரந்தூரில் அமைய இருந்தது. விமான நிலையம் அமைக்க தேவையான நிலம் பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து கையகப்படுத்தப்பட்ட உள்ளது.
இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 705 வது நாளாக நீடித்துள்ளது. இந்நிலையில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் பரந்தூர் தவிர ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள 57 ஊராட்சிகளிலும் நடைபெற்ற முடிந்தது. இதன் மூலம் கிராம சபை கூட்டம் நடத்த வராமல் அதிகாரிகள் புறக்கணித்ததாக தெரிவிக்கப்பட்டனர். கிராம மக்கள் பெரும் அதிர்ச்சி உள்ளாகி உள்ளனர்.
இதனை தொடர்ந்து பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் வருகின்ற மூன்றாம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.பரந்தூர் கிராம மக்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி ஆந்திரா, சித்தூர் ஆகிய மாவட்ட ஆட்சியரை சந்திக்க போவதாக அறிவித்திருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.