மீண்டும் நான்காவது முறையாக அறுந்து விழுந்த நெல்லையப்பர் தேரின் வடம்..!! பக்தர்கள் குமுறல்..!!

திருநெல்வேலி மையப்பகுதியில் அமைந்துள்ள காந்திமதி அம்மன் உடனுறை நெல்லையப்பர் கோவிலில் ஆணித்திருவிழா மிகவும் விசேஷமாய் நடைபெறும். அப்போது தேர் இழுப்பது வழக்கம், இந்த தேரின் வடம் இம்முறை நான்கு முறை அறுபட்டு உள்ளது. 517 வருடங்களாக நடைபெறும் திருவிழாவில் இந்த முறை தேரின் வடம் அறுந்த விழுந்து இருப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மையப்பகுதியில் அமைந்துள்ள காந்திமதி அம்மன் உடனுறை நெல்லப்பர் கோவில். சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் நடைபெறும் ஆணை திருவிழா மிகவும் விசேஷமானது. 10 நாட்கள் தொடர்ந்து இந்த திருவிழாவானது நடைபெறும். அதிலும் இந்த திருவிழாவில் இறுதியில் நடைபெறும் தேரோட்டம் நாடு முழுவதும் மிகப் பிரசித்தி பெற்றது எனவே கூறலாம் .

இந்த நெல்லையப்பர் தேரோட்டத்தை காண திருநெல்வேலி மட்டும் இன்றி தமிழக முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். 1505 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தேர் 450 டன் எடை உடைய 13 அடுக்குகளை கொண்டதாக முதலில் உருவாக்கப்பட்டது. அதன் பின் பாதுகாப்பு காரணங்களுக்காக 9 அடுக்குகள் குறைக்கப்பட்டு தற்போது வெறும் ஐந்து அடுக்குகள் மட்டுமே கொண்டுள்ளது. இந்த ஆண்டு ஆனித் திருவிழா கடந்த ஜூன் 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. ஒன்பதாம் நாளான நேற்று முன்தினம் காலை சிறப்பாய் தேரோட்டம் நடைபெற்றது. எதிர்பாராத விதமாக தேரின் வடம் அறுந்து விழுந்தது. இதில் இரண்டு பக்தர்கள் காயமடைந்துள்ளனர் .‘

517 ஆண்டுகளாக நடைபெறும் இந்த தேர் விழாவில் முதல் முறையாக தற்பொழுதுதான் தேரின் வடம் அடுத்தடுத்து நான்கு முறை அறுந்து விழுந்து உள்ளதால் தேர் தாமதமாக கோவிலை சென்றடைந்தது, அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. இருப்பினும் அதிகாரிகளின் மெத்தனப்  போக்கை குறித்து பொதுமக்கள் தேர் சக்கரம், வடங்களின் உறுதித் தன்மை குறித்து அதிகாரிகள் சோதனை முன்னோட்டத்தை நடத்தவில்லை என்று தங்களது குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Read Previous

புதிய குற்றவியல் சட்டங்கள் என்றிலிருந்து நடைமுறைக்கு வரும்..? மத்திய அமைச்சர் விளக்கம்..!!

Read Next

ஜூன் 24 இன்று சிக்கலில் சிக்கா போகும் நான்கு ராசிக்காரர்கள்..!! உங்கள் ராசி உள்ளதா..? உடனடியாக பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular