தவெக தலைவர் விஜய் தீபாவளி பண்டிகைக்கு பிறகு தேர்தல் பரப்புரையை மீண்டும் தொடங்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகளை தீவிரப்படுத்துமாறு தவெக நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். தீபாவளி முடிந்ததும் முதலில் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து, அவரது பரப்புரை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




