மீண்டும் மீண்டும் தொடரும் நாய்களின் அட்டூழியம்..!! 12 வயது சிறுவனை கடித்துக் கொதரைய நாய்..!!

சென்னையில் சமீப காலமாகவே நாய்களால் சிறுவர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர்.  கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இரண்டு வயதுடைய குழந்தை ஒருவரை தெருநாய் தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. அதனை தொடர்ந்து தற்பொழுது 12 வயதுடைய சிறுவன் ஒருவன் நாய்களால் தாக்கப்பட்ட உள்ளார்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் சமீப காலமாகவே நாய்கள் சிறுவர்களை குறி வைத்து தாக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ச்சியாய் நடைபெற்றுக் கொண்டே வருகின்றது, நொய்டா, டெல்லி ஆகிய பகுதிகளில் வழங்கப்பட்டு வந்த ராட்வீலர் போன்ற கொடூர இன வகையை சார்ந்த நாய்களால் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பாதிக்கப்பட்ட பல நிகழ்வுகள் செய்திகளாக நாம் கண்டோம்.

இவற்றையெல்லாம் கண்டு காணாது ராட்வீலர் போன்ற வெறிகொண்ட நாய்களை வாங்கி வளர்க்கும் நபர்களின் கட்டுப்பாடுகள் மீறியும் சில நேரம் மூர்க்கத்தனத்துடன் அவை தாக்கி வருகின்றது. இதற்கிடையில் சென்னையில் உள்ள கொளத்தூர் பகுதியை சார்ந்த சிறுவன் ஒருவனை நாய் ஒன்று தாக்கி உள்ளது.

சென்னை கொளத்தூர் பகுதியை சார்ந்த 12 வயதுடைய சிறுவன் ஒருவன் அப்பகுதியில் உள்ள விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் ராட்வீலர் எனப்படும் நாய் தாக்கியதால் உடல் முழுவதும் பலத்த காயமடைந்துள்ளார். மேலும் அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்,  மேற்படி தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.

 

Read Previous

லிவிங் டுகெதர் காதலியின் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தவர் போலீசாரால் கைது..!!

Read Next

கோவையில் சோகம்..!! வீட்டு ப்ரோக்கர் விஷம் அருந்தி தற்கொலை..!! காரணம் இதுவா..? முழு விவரம் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular