மீண்டும் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!! அந்த நடிகர் யார் தெரியுமா?..

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பட்டிதொட்டி கலக்கும் நடிகை தான் கீர்த்தி சுரேஷ்.இவர் நடிக்கும் பாபி ஜான் என்கிற படம் ஹிந்தியில் வருகிற டிசம்பர்-ல் வெளிவர உள்ளது.தற்போது இவர் கண்ணிவெடி,ரிவால்வர் ரீட்டா ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார்.

 

 

இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் இப்பொது இயக்குனராக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.இவரின் முதல் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி ஹிட் ஆனதை தொடர்ந்து இவர் ராயன் படத்தை இயக்கி அதுவும் வெற்றியே கொடுத்தது.அதை தொடர்ந்து இந்த ஆண்டு வெளியாக இருக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தையும் இவரே இயக்கியுள்ளார்.

 

 

இதைத்தொடர்ந்து இவர் அடுத்து இயக்கும் படம் தான் இட்லி கடை.இதன் படப்பிடிப்பு தற்பொழுது தடபுடலாக நடந்துவருகிறது.இதை தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் வரும் 5-வது படத்தில் மீண்டும் தனுஷுடன் ஜோடியாக இணைய உள்ளார் கீர்த்தி சுரேஷ் என்னும் தகவல் கிடைத்துள்ளது. இவர்களின் கூட்டணியில் ஏற்கனவே வெளி வந்த தொடரி பிரமாண்ட வெற்றி கொடுத்த நிலையில் மீண்டும் இவர்கள்களின் ஜோடியுடன் கூடிய கதைக்களத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Read Previous

மழையால் அவதிப்படுபவர்கள் கேப்டன் ஆலயத்தில் வந்து தங்கிக் கொள்ளலாம்..!!

Read Next

உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவளைத் திருத்த 13 வழிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular