
அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஏ.கே.ஆண்டனி. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், ராகுல் காந்தியை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.ஆண்டனி, மதச்சார்பற்ற இந்தியாவை மீட்டெடுப்பதற்கான தனது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ராகுல் காந்தியினால் மட்டுமே முடியும் என்று கூறினார். ராகுல் காந்தி நடக்கவிருக்கும் 2024 தேர்தலில் வயநாடு மக்களவைத் தொகுதியைத் தேர்ந்தெடுப்பார் என்று நம்புகிறேன். கேரள மக்களின் விருப்பமும் அதுதான், இவ்வாறு அவர் கூறினார்.