மீண்டும் வரதட்சணை கொடுமை – பெண் தற்கொலை.!!

திருவனந்தபுரம்: திருவல்லம் வந்திதடாவில் வரதட்சணை கொடுமையால் ஷாஹினா என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், திருவல்லம் போலீசார் அவரது கணவர் நௌபால், மாமியார் சுனிதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். நௌபல் மற்றும் சுனிதா இருவரும் தொடர்ந்து ஷாஹினாவை அடித்து காயப்படுத்தியதாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருமணத்திற்காக 75 பவுன் தங்க ஆபரணங்கள் வழங்கப்பட்டதாக ஷாஹினாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். திருமணமான அன்றே கணவர் மற்றும் மாமியார் தங்கள் மகனை உடல் ரீதியாக தாக்கியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். சமீபத்தில் திருவனந்தபுரத்தில் பெண் மருத்துவர் ஒருவரும் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Previous

காஞ்சி கோவிலில் ஆந்திர அமைச்சர் ரோஜா தரிசனம்..!!

Read Next

எலி பேஸ்ட் தின்ற பெண் குழந்தை பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular