தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வந்த நிலையில் தொடர்ந்து 17 மாவட்டங்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது..
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் 17 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கன மழை பெய்வதற்கான எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது..!!