மீனாட்சியம்மன் கோவிலில் நவீனமாகும் பிரசாத தயாரிப்பு கூடம்..!!

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆண்டுக்கு ரூ.6 கோடிக்கு பிரசாதம் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், பிரசாதம் தயாரிப்பு கூடங்களை நவீன முறையில் மாற்றி அமைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய இயந்திரங்களை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பக்தர்களுக்கு நிர்வாகம் சார்பில் இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர புளியோதரை, பொங்கல், அப்பம், வடை என பிரசாதம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உரிய அரசு அனுமதிக்குப்பிறகு இதற்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்படும் என கோவில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

Read Previous

இன்றைய ராசிபலன் 05-10-2023

Read Next

பல்லடம் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular