மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் குவிந்த பக்தர்கள்..!!

மதுரையில் கடந்த சில நாட்களாக தீபாவளி புத்தாடை உள்ளிட்ட பொருட்கள் வாங்க பல்வேறு ஊர்களில் இருந்தும், பகுதிகளிலிருந்தும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்தனர். இந்நிலையில் பொருட்கள் வாங்குவதற்கு முன் பொதுமக்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அதிகளவு வந்ததால் திருவிழா போல இருந்தது. வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால், மக்கள் கடை வீதிகளில் குவிந்து வருகின்றனர். சென்னை, திருச்சி, நெல்லை, கோவை என அனைத்து மாவட்டங்களிலும் பண்டிகை கால விற்பனை மும்முரமாக நடக்கிறது.

Read Previous

சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு..!!

Read Next

தீபாவளிக்கு அரசு ஸ்பெஷல் அறிவிப்பு.. ரூ.600 மிச்சம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular