விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களுள் சிறகடிக்க ஆசை சீரியல் மிகவும் சுவாரசியமாக தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோடில் விஜயா ரோஹிணியிடம் க்ரிஷ் பற்றி மோசமாக பேசினாள். அதை கேட்ட ரோஹிணி மிகவும் வருத்தப்பட்டு வித்யாவிடம் கிரிஷை தன்னுடனே இருக்க வைத்துக்கொள்ளலாமா என்று ஆலோசித்து வருகிறாள்.
இந்நிலையில் இன்றைய எபிசோடில் சீதா படித்து முடித்து, 1st கிளாஸ்ல் தேர்ச்சி பெற்று பட்டம் வாங்கப்போவதாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை மீனாவிடமும் முத்துவிடமும் சொல்கிறாள். இதை கேட்ட மீனாவும் முத்துவும் அதீத சந்தோசத்தில் உள்ளார்கள். சீதாவை சந்திக்க முத்துவும் மீனாவும் போகிறார்கள். அங்கு சீதா “இது எல்லாத்துக்கும் காரணம் மீனா அக்கா தான்” என்று கூறி ஆனந்த கண்ணீர் விடுகிறாள். இதை கேட்ட முத்து “மீனா நீ நல்ல படிப்பியா?” என்று கேட்கிறான். அதற்கு மீனாவின் அம்மா “ஆமா மாப்பிள்ளை மீனா சின்ன வயசுல நல்ல படிப்பாள்” என்று சொல்கிறாள். இதை கேட்ட முத்து மீனாவை படிக்க வைக்க நினைப்பான் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்து என்ன முடிவு எடுக்கப்போகிறான் என்பதை பொறுத்திருந்து நாளைய எபிசோடில் காணலாம்.