
எலும்புகள் உட்பட உள்ளுறுப்புகளுக்கு பல பலம் தரக்கூடிய சால்மன் மீனின் நன்மைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? உடல் எடை குறைய விரும்புவர்கள் சால்மன் மீனை சாப்பிடலாம் சால்மன் மீன்கள் குறித்து ஆய்வுகள் சொல்வதென்ன சுருக்கமாக பார்ப்போம்…
ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு கலரில் சற்று சதை பாங்குடன் காணப்படும் மீன்கள் தான் சால்மன் அபாரமான சுவையை கொண்ட மீனை விரும்பாதவர்களை இருக்க முடியாது, நன்னீரில் ஓடைகளில் குஞ்சுகளை பொறிக்கும் தன்மை கொண்டவை இந்த சால்மன் மீன்கள் இந்த குஞ்சுகள் பெரிதும் ஆனதும் அவை கடலுக்கு இடம் பெயரப்பட்டு சத்துள்ள மீனாக மாறுகிறது இது மறுபடியும் இனப்பெருக்கம் செய்ய ஆரம்பிக்கும் போது நன்னீருக்கு கொண்டுவரப்படுகிறது, சால்மன் மீன்களில் பல வகைகள் உண்டு இது பசிபிக் அண்ட் பகுதியில் காணப்படும் மீன்கள் தான் உண்மையான சால்மன் மீன்கள் இதனை காலா மீன் அல்லது கிழங்கான் மீன் என்று அழைக்கின்றனர், புரோட்டின் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் இது என்பதால் உலகளவில் உணவாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது ரத்த அழுத்தத்தை குறைத்து கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தக்கூடியவை இதன் காரணமாக இதய நோய் ஆபத்தை சால்மன் மீன்கள் குறைகின்றது, இது தவிர வைட்டமின் பி பொட்டாசியம் துத்தநாகம் பி1 பி2 பி3 பி5 பி12 வைட்டமின்கள் செலினியம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன சால்மனில் உள்ள ஒமேகாதிரி கொழுப்பு அமிலங்கள் மூளை செயல்பாட்டுக்கு பேரு உதவி புரிபவை குறிப்பாக நினைவு திறனை அதிகரிக்க கூடியது..!!