
மீன் சமைக்கும்போது அசைவ வாடை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
இந்த காலகட்டத்தில் மீன் என்பது அனைவரின் வீடுகளிலும் சமைக்கப்படுகிறது. மட்டன் மற்றும் சிக்கன் எந்த அளவிற்கு பிரபலமாகி சமைக்கப்பட்டதோ, அதே அளவிற்கு தற்போது மீன் அனைவரின் வீடுகளிலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கட்டாயமாக சமைக்கப்படுகிறது. இந்நிலையில் மீன் சமைக்கும் போது வரும் அசைவ வாடை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
மீன் மார்க்கெட்டில் இருந்து மீன் வாங்கி வரும் பொழுது மீன் துண்டை ஸ்லைஸ் செய்து வாங்கி வருகிறோம். அவ்வாறு வாங்கி வரும்போது அதன் நடுவில் கருப்பு நிறத்தில் ரத்தம் உறைந்துள்ள பகுதியை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்தாலே அசைவ வாடை வராமல் இருக்கும். இருந்தாலும் முழுமையாக அசைவ வாடை வராமல் இருக்க சிறிதளவு கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து நீரில் நன்றாக அலசி பின்பு சமைத்தால் அசைவ வாடை குறையும். இவையெல்லாம் பண்ணியும் அசைவ வாடை குறையவில்லை என்றால் அது நாள்பட்ட மீனாக இருக்கலாம். நாள்பட்ட மீனாக இருந்தால் அதன் அசைவ வாடையை தவிர்க்க முடியாது.