மீன் சம்பந்தமான அசைவ உணவுகளை சமைக்கும் போது இதையெல்லாம் பாலோ பண்ணுங்க..!!

 

மீன் குழம்பை அடுப்பில் இருந்து இறக்கும் முன் இரண்டு சிறிய வெங்காயத்தை தோலுடன் தட்டி குழம்பில் சேர்த்து இறக்கினால் நல்ல மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.

இறாலை உரித்துக் கழுவியதும் சிறிது நேரம் மோரில் ஊறவிட்டால், வாடை குறைந்து விடும். சுவையும் கூடுதலாக இருக்கும்.

மீன் குழம்பு செய்யும் போது வெந்தயம், பெருங்காயம் இரண்டையும் வறுத்து பொடி செய்து கால் டீஸ்பூன் போட்டு இறக்கினால் நல்ல மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.

பாஸ்மதி அரிசியை உதிரியாக வடித்து, ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, வேக வைத்த இறாலை சேர்த்து எக் ரைஸ் செய்தால் இறால் எக் ரைஸ் சுவையாக இருக்கும்.

இறால் குழம்பு செய்யும் போது, அதனுடன் சுரைக்காய், கொத்தவரங்காய் சேர்த்து செய்தால் வித்தியாசமான சுவையாக இருக்கும்.

இறால் பஜ்ஜி செய்யும் போது பஜ்ஜி மாவுடன் மைதா சேர்த்தால் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.

மீன் குழம்பு தாளிக்கும் போது சிறிதளவு வெந்தயம் போட்டு தாளித்தால் மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.

இறால் பிரியாணி தயிரில் செய்வதால் இறால் வேக ரொம்ப நேரம் எடுக்காது, சீக்கிரமாக செய்து விடலாம். சிறுநீரகத்தில் கற்கள் இருக்கும் பிரச்சினை இருப்பவர்கள் இறால் பிரியாணி செய்து சாப்பிடலாம்.

இறால் துண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, உப்பு, சோம்பு, கடலைமாவு, அரிசிமாவு, பாசிப்பருப்பு மாவை சேர்த்து கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து உதிர்ந்து விடும் பக்குவத்தில் பிசைந்து இறால் பக்கோடா போடலாம்.

நெத்திலி மீன் குழம்பிற்கு கடைசியில் தான் மீனை போட வேண்டும் இல்லையென்றால் கரைந்து விடும். அதேபோல் புளி தேவைப்பட்டால் சேர்க்கலாம். இல்லையெனில் கூடுதலாக ஒரு தக்காளி பழம் சேர்த்தால் குழம்பு சுவையாக இருக்கும்.

அயிரை மீன் குழம்பு செய்யும் போது தேங்காய் பாலை மசாலா கொதி வரும்போது ஊற்றி, நன்றாக கொதித்த பின் அயிரை மீனைப் போட்டு இறக்கினால் குழம்பு ருசியாக இருக்கும்.

நெத்திலிக் கருவாடு வறுவல் செய்வதற்கு முன் ஒரு பாத்திரத்தில் கருவாடை போட்டு சிறிது வெந்நீரை ஊற்றி, சிறிது நேரம் கழித்து அதை சுத்தம் செய்து பிறகு வறுவல் செய்தால் கருவாடு சுவையாக இருக்கும். உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.

மீன் குழம்பை பொடி வகைகள் போட்டு செய்வதை விட அரைத்த மசாலா போட்டு செய்தால் நன்றாக இருக்கும்.

கருவாட்டில் உப்பு இருப்பதால், உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் மட்டும் சேர்த்துக் கொள்ளவும்.

இறால் நாலு நிமிடம் வெந்தால் போதும். அதற்கு மேல் வெந்தால், ரப்பரைப் போல் அழுத்தமாகி விடும். இறால் சமைக்கும் போது, இஞ்சியும் பூண்டும் அதிகம் சேர்க்க வேண்டும்.

கருவாட்டுக் குழம்பு செய்வதற்கு துண்டுகருவாடுகள் மட்டுமின்றி, நெத்திலி போன்ற வேறு சிறு அளவிலான கருவாடுகளையும் பயன்படுத்தி செய்யலாம்.

நண்டு வடையை எண்ணெயில் பொரிக்கும் போது உடையாமல் இருக்க முட்டை ஒன்றை உடைத்துக் கலந்து பிசைந்தால் நண்டு வடை உடையாமல் மொறுமொறுப்பாக இருக்கும்.

 

Read Previous

“ஹெர்னியா” என்னும் குடலிறக்கம் ஏற்படாமல் இருக்க தண்ணீரை இப்படி குடிங்க.!!

Read Next

உடல் எடையை குறைக்க உதவும் பட்டை இஞ்சி டீ..!! கண்டிப்பா அனைவரும் ட்ரை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular