நாம் முகத்திற்கு கடலை மாவு பயன்படுத்தி முன்பு சில தவிர்க்க வேண்டிய விஷயங்களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்…
சரும பராமரிப்பு குறிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று கடலை மாவு இந்த நிலையில் இந்த கடலை மாவை சருமத்திற்கு பயன்படுத்தும் போது நாம் செய்யும் பொதுவான தவறுகள் என்னவென்று இங்கு காணலாம், சரும பொலிவு பேஷ்பேக்குகளின் கடலை மாவு பேக்கிங் சோடா சேர்த்து பலரும் பயன்படுத்தும் நிலையில் இந்த சேர்மம் உண்மையிலேயே எதிர்மறை விளைவுகளை உண்டாக்க கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர், பேக்கிங் சோடா சருமத்தின் பிஹெச் அளவை பாதிக்கும் தன்மை கொண்டது. மேலும் இந்த பேக்கிங் சோடாவை கடலை மாவுடன் சேர்த்து பயன்படுத்தும் போது சரும வறட்சி எரிச்சல் சிவத்தல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்க கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர், என்னை வடிதல் பிரச்சனையை சமாளிக்க பலரும் இந்த கடலை மாவுடன் ஆப்பிள் சிடார் வினிகர் சேர்த்து பயன்படுத்துவது வழக்கம் அசிட்டியில் பண்புகள் கொண்ட இந்த வினிகரை கடலைமாவுடன் சேர்ப்பது முற்றிலும் தவிர்க்க வேண்டிய விஷயமாகும், அமிலத்தன்மை கொண்ட ஆப்பிள் சிடார் வினிகரை கடலை மாவுடன் சேர்த்து பயன்படுத்தும் போது சரும வரட்சிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் மேலும் சரும இறுக்கம் தோல் உரிதல் பிரச்சனைகள் இது வழிவகுக்கும், சர்ம துளைகளில் மறைந்திருக்கும் மாசுகளை நீக்க கடலை மாவுடன் எலுமிச்சை சாறு பலரும் சேர்த்து பயன்படுத்துவது வழக்கம் இது முற்றிலும் தவறான ஒரு முன்முயற்சி என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர், அமிலத்தன்மை கொண்ட இந்த எலுமிச்சை சாறு சருமத்தின் இயற்கை எண்ணெய் வற்ற செய்துவிடலாம் இதன் விளைவாக சரும வளர்ச்சி எரிச்சல் சிவத்தல் போன்ற பிரச்சனைகள் உண்டாகக்கூடும், கடலை மாவுடன் இந்த உப்பு சேர்த்து பயன்படுத்துவது சிராய்வுத் தன்மையை அதிகரிக்கும் இதன் விளைவாக சருமத்தில் சிராய்வு ரத்த காயங்கள் உண்டாகக்கூடும் எனவே கடலைமாவுடன் தயிர் தேன் அல்லது மஞ்சள் சேர்த்து சருமத்தில் தடவுவது நல்ல நன்மைகளை தரும் என்று கூறுகின்றனர்..!!