
முகத்தில் உள்ள அழகை கெடுக்கும் கருவளையம் மறைவதற்கு இதை மட்டும் செய்ய போதும்..!!
குறிப்பாக இந்த காலகட்டத்தில் கருவளையம் காரணமாக ஆண்களும் சரி பெண்களும் சரி அவதிப்படுகின்றனர். இந்த கருவளையத்திற்கு முக்கியமான காரணம் இரவில் நீண்ட நேரம் தூங்காமல் கண் விழித்திருப்பதுதான். அது மட்டும் இன்றி இரவில் நீண்ட நேரம் போன் பார்ப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த கருவளையத்தை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கருவளையம் மறைய தக்காளி சாறு எலுமிச்சை சாறு இரண்டையும் சம அளவு கலந்து கண்களின் கீழே தடவி பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வர படிப்படியாக சரியாகிவிடும். உருளைக்கிழங்கை கழுவி தோலுடன் துருவி சாறு எடுத்து அந்தச் சாற்றில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்து சில நிமிடங்கள் கழித்து எடுத்து வர கருவளையம் மறையும். பாதாம் எண்ணையை தினமும் கண்களின் கீழே தடவி வர கருவளையம் நீங்கும். காய்ச்சாத பாலை கண்களை சுற்றி தடவுவதும் நல்ல பலனை தரும்.