
பெண்கள் பலரும் முகத்தில் வரும் முகப்பருக்களால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு சிறந்த தீர்வாக கருவேப்பிலை பேஸ் பேக்…
கருவேப்பிலை என்பது சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும் கூந்தல் பாதிப்புகளை குணப்படுத்தி அதனை வளர செய்ய உதவும் ஒரு பொருளாகவும் தான் பலருக்கு தெரியும் ஆனால் இதில் சரும பராமரிப்புக்கு உதவும் பண்புகளும் நிறைந்திருக்கிறது அது குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் கறிவேப்பிலையில் இவை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்கள் இருக்கிறது இது சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் முகப்பருக்கள் உள்ளவைகளை நீக்கு உதவுகிறது இதனை கொண்டு வீட்டிலேயே பேஸ்பேக் தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போம், இதுபோன்ற இயற்கை பேக் நமது சருமத்தில் எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதை கவனத்தில் கொள்ளவும் கருவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சிறிதளவு தேன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் தண்ணீர் தேவையான அளவு, செய்முறை கருவேப்பிலையை கழுவி சுத்தப்படுத்தி மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும் பின்னர் அதில் கடலை மாவு மஞ்சள் தூள் தேன் ஆகியவற்றை போட்டு கலந்து பேஸ்ட் போல் தயாரித்துக் கொள்ளவும், இந்த பேஸ் பேக்கை முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி ஒரு 20 நிமிடம் அப்படியே விடவும் அதன் பின்னர் வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தை கழுவவும் இப்படி செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும் பொலிவாகவும் காணப்படும், கருவேப்பிலையுடன் எலுமிச்சை சாறு கருவேப்பிலை இலைகளை எலுமிச்சை சாறு விட்டு ஒரு பேஷ்பேக் தயாரிக்கலாம் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை எடுத்து அதனை சுத்தமாக கழுவி மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் அந்த பேஸ்ட்டை ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள் அந்த பேஸ்ட்டில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து நன்கு ஒரு சேர கிளறி எடுத்துக் கொள்ளுங்கள் முகத்தில் தடவும் பேஸ்ட் போன்ற பலத்தில் இருக்க வேண்டும், இந்த பேஸ்ட்டை எடுத்து உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி கொள்ளுங்கள் ஒரு 15 நிமிடம் அதனை அப்படியே நன்கு உலர விட்டு அதன் பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவவும் இப்படி செய்வதன் மூலம் முகம் பொலிவடையும் இதில் சேர்க்கப்படும் மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறையில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் கரும்புள்ளிகள் முகப்பருக்கள் உள்ளிட்டவர்களை நீக்கும்…!!