
- முக சுருக்கத்திற்கு தீர்வளிக்கும் பார்லி டீ… எப்படி செய்வது நன்மைகள் என்ன?
பொதுவாக சருமம் பொலிவாக இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புவோம். சந்தையில் கிடைக்கும் எண்ணற்ற கிரீம்களை அதற்காக பயன்படுத்துவோம். ஆனாலும் சருமத்தில் சுருக்கங்கள் முழுமையாக மறையுமா என்பது கேள்வி குறி தான். இதற்கிடையில், சில உணவு பொருட்கள் எடுத்து கொள்வதால் சரும சுருக்கங்கள் மறைந்து பொலிவான சருமம் கிடைக்கும். குறிப்பாக பார்லி டீ அருந்துவதால் சருமம் பொலிவு பெறும். இந்த டீயை எப்படி செய்வது என பார்போம்.
எப்படி செய்வது:
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் வறுத்த பார்லியை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை 10 முதல் 20 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அதன் பிறகு இதை குளிர விடவும். விருப்பப்பட்டால் சுவைக்கு ஏற்ப எலுமிச்சை சாறு மற்றும் தேனை சேர்த்துக் கொள்ளலாம்.
பார்லி தேனீரில் உள்ள ஊட்டசத்துக்கள்:
பார்லி தேநீரில் பொட்டாசியம், நியாசின், இரும்புச்சத்து, கால்சியம், போலிக் அமிலம், கனிமங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இந்த பார்லி தேநீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவுகிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தில் இருந்து எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் சுருக்கங்களை குணமாக்குகிறது. மேலும் முகப்பருவையும் குணமாக்குவதால் சருமம் என்றும் இளமையாக இருப்பதை உறுதி செய்கிறது.
இதுமட்டுமின்றி, பார்லியில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு திறன் தொண்டை புண், ஆஸ்துமா ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும். அனைத்து வயதினரும் இதனை தாராளமாக அருந்தாலாம்.