முடிவே இல்லாத காதல் கதைகள் இன்னும் பலர் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..!!

திருமணம் சேர்ந்து வாழ்தல் எதுவாயினும் இரு மனிதர்கள் வாழ்க்கையை மிச்சம் மீதி ஒளிவு மறைவு எதுவும் இன்றி பகிர்ந்து கொள்வதற்கான சாத்தியங்களை அது அளிக்கிறது…

இணையோடு வாழ்வதை தவிர்ப்பது ஓர் அசாதாரணமான முடிவு தான் எனினும் அந்த முடிவை எடுத்து தனித்தே வாழ்பவர்களுக்கு சேர்ந்து தான் நம் சமூகமாக உள்ளது..

இன்னொருவரோடு வாழ்க்கையை பகிர்ந்து கொல்லாதவர்கள் மனித பிறவியாக பிறந்து தான் இன்பத்தை முழுமையாக அனுபவிக்கவில்லை என்கிற பரிவு நமக்கு தோன்றலாம். அனைவரும் சேர்ந்து இவர்களை புறக்கணித்து விட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சி கூட ஏற்படலாம். உரிமை இருக்கும் இடத்தில் அவர்களோடு தயக்கம் எதுவும் இன்றி நம்மால் உரையாட முடியும். தனியாக வாழ்வது என்கிற முடிவை எடுக்க நேர்ந்தது குறித்து நம் கேள்வி அவர்களை ஒருவேளை வருந்த வைக்கலாம் அல்லது அவர்கள் அளிக்கும் பதில் நம்மை வருந்த செய்யலாம். இரண்டுக்குமான சாத்தியங்களை ஏற்றுக் கொள்ள முடிகிற உறவு இருக்கையில் அங்கே மனம் விட்டு பேச முடிகிறது அப்படியோ உரையாடல் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு வாய்த்தது. கேள்வி கேட்டவர் ஜெயகாந்தன் பதில் சொன்னவர் தோழர் ஏ எஸ் கே…

ஏ.எஸ்.கே சுருக்கமான வரலாறு : இவரது முழு பெயர் ஆவியூர் தமிழகத்தில் சீனிவாச ஐயங்கார் கிருஷ்ண மாச்சாரி இந்திய பொதுவுடமை கட்சியை கட்டமைத்த முன்னோடி தலைவர்களில் ஒருவர். ஹைதராபாத்தில் பிறந்த வளர்ந்த தமிழர் இந்திய விடுதலைக்காக போராடி கணிசமான காலத்தை சிறையில் கழித்தவர் சென்னையில் பல தொழிற்சகங்களை திரவியதில் ஏ.எஸ்.கே வுக்கு பெரும் பங்கு உண்டு. இவர் பொதுவுடமையை கட்சிக்கு பெருமளவில் நிதி திரட்டி கொடுத்தார் தமது சமகால தலைவர்களான பெரியார், மீதும் அண்ணல் அம்பேத்கர் மீதும் ஏ எஸ் கே மிகவும் மதிப்பு கொண்டிருந்தார். டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈவேரா போன்றவை இவர் எழுதிய நூல்கள் தொடக்கத்தில் ஏ எஸ் கே ஐயங்கார் என அழைக்கப்பட்ட அவர் பிற்காலத்தில் அந்த அடையாளத்தை அதிகாரப்பூர்வமாக அடக்கி விட்டார். ஏ எஸ் கே யின் பேச்சு செயல்பாடுகளும் ஜெயகாந்தனின் இளமைக்காலத்தில் உயிரோடும் உணர்வோடும் ஈர்த்தது. தன்னைவிட வயதில் மூத்தவர்களோடு கூட மனதடைகள் இன்றி பேசும் இயல்பு ஜெயகாந்தனுக்கு உண்டு அவர் சந்தித்த மூத்தவர் பலரை போன்றே ஏ எஸ் கே எம் அதை ரசிப்பவராக இருந்தார்.

ஜெயகாந்தனின் நினைவு கூறல்: ஜெயகாந்தன் போகிற போக்கில் ஒரு நாள் குறிப்பு போல எழுதியுள்ள பத்திகள் தெளிவான அனுபவத்தைக் கொண்டிருக்கும். தனக்கோ பிறருக்கு ஏற்பட்ட மிக அரிதான அனுபவங்களை மிக சில வரிகளில் சொல்லிவிடுகிற திறன் அவருக்கு உண்டு. ஏ எஸ் கே பற்றி அவர் எழுதிய பத்தி அதற்கு ஒரு உதாரணம். 70 வயது வரை வாழ்ந்த ஏ எஸ் கே இறுதிவரை பிரம்மச்சாரியராகவே வாழ்ந்தது குறித்து ஜெயகாந்தனுக்கு கேள்விகள் இருந்தன அவர் உடனான உரையாடலை ஜெயகாந்தன் ஒரு வார இதழில் 1987 மற்றும் 1988 எழுதி வந்த தொடரில் பதிவு செய்திருக்கிறார் அது சிந்தனையில் ஆயிரம் என்கிற நூலாக அக்காலகட்டத்திலேயே தீராத காதலாக வெளிவந்தது. இப்படி பலரும் பலருக்குள் இருக்கும் முடிவே இல்லாத காதலை பற்றி ஏதோ ஒரு இடத்தில் சொற்பொழிவாற்றுகிறார்கள்..!!

Read Previous

தனுஷ் ராசிக்கு அற்புதமான மாற்றத்தை தரும் மாசி மாதத்தில் பலன்கள்..!!

Read Next

பழைய காலத்தில் பெரியவர்கள் வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டு சின்ன சின்ன கைவைத்தியங்கள் செய்தார்கள் அது என்னவென்று தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular