
இன்றைய காலகட்டங்களில் நாம் சாப்பிடும் உணவு முறை நம் உடலில் பல மாற்றங்களை தருகிறது மேலும் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவாக இருப்பதனால் வளரும் இளம் பருவத்திலேயே முடிகள் கருமை நிறத்தை இழந்து வெண்மை நிறமாக மாறுவதும் அல்லது முழுமையாக முடி கொட்டி வழுக்கை தலையுடன் இருப்பதும் நாம் பார்த்து வருகிறோம்.
முடி வளர வேண்டுமா இதனை செய்யுங்கள் முருங்கைக்கீரை விட்டமின் டி மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதனால் இது முடி வளர்வதற்கு உதவுகிறது, முருங்கைக்கீரை உணவில் சேர்த்துக் கொள்வது மட்டுமல்லாமல் அதை ஹேர் பேக்காகவும் பயன்படுத்தலாம், முருங்கைக்கீரையை தேவையான அளவு எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் அரைத்த முருங்கைக் கீரையுடன் தேங்காய் எண்ணெயை நன்றாக கலந்து 30 நிமிடங்கள் தலையில் தேய்த்து உலர்ந்த பின் குளித்து வந்தால் முடி கருமையாகவும் நீண்ட முடி வளர்ச்சி அதிகரிப்பையும் காணலாம்..!!