
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மூளை கலங்கிவிட்டது என்றும் அவரது செயல்பாடுகள் அனைத்தும் நாட்டை மூன்றாம் உலகப்போரை நோக்கி இழுத்துச் செல்லும் என்றும் விமர்சித்திருக்கிறார்.
டொனால்ட் டிரம்ப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “ஜோ பைடன் நேர்மையற்றவர் மட்டுமல்ல முட்டாளும் கூட. திறமை இல்லாதவரும் தான். எல்லைகளை திறந்து விட்டு நாட்டின் சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்ற வகையில் வெறிபிடித்தவரான அவருக்கு மூளை கலங்கிவிட்டது என்று நினைக்கின்றேன். அவரால்தான் நம் நாட்டை சீரழித்து மூன்றாம் உலகப்போரை நோக்கி இழுத்துச் செல்ல முடியும்” என விமர்சனம் செய்துள்ளார்.
கடந்து சில நாட்களுக்கு முன்பாக ஹரிசோனா மாகாணத்தில் அமெரிக்கா-மெக்சிகோ எல்லைக் கதவுகள் மழை நீரை வெளியேற்றுவதற்காக திறக்கப்பட்டுள்ளன. ஆனால் அமெரிக்காவில் இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
அமெரிக்காவில் மழை நீரை வெளியேற்ற திறந்து விடப்பட்ட எல்லைக் கதவுகளின் வழியே சட்ட விரோதமாக பலரும் நுழைவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.