முட்டைகள் அழுகவில்லையாம்… அது கறுப்பு மையாம்..!!

ஈரோடு மாவட்ட சத்துணவு கூடத்தில் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதாக பாஜகவினர் குற்றம் சாட்டியிருந்தனர். இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், முட்டைகள் மீது கறுப்பு மையால் ஸ்டாம்ப் அடிக்கப் பட்டிருந்தது. பின்னர் முட்டைகளின் மீது மழைநீர் பட்டதால் கறுப்பு மை உள்ளே இறங்கியிருக்கிறது. முட்டைகள் அழுகவில்லை. சத்துணவு முட்டையில் எப்போது குற்றம் கண்டுபிடிக்கலாம் என சிலர் செயல்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு, தரமான முட்டைகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது என்றார். அமைச்சரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Read Previous

சென்னையில் 408 புகார்கள் – ஆணையர் தகவல்..!!

Read Next

செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular