
- முட்டைக்கோஸ் சீஸ் கோலா
தேவையானவை :
- முட்டைக்கோஸ் – 100 கிராம்
- ரொட்டித் தூள் – 6 ஸ்பூன்
- பன்னீர் – 50 கிராம்
- உருளைக்கிழங்கு – 200 கிராம்
- பச்சை மிளகாய் – 4
- பிரெட் துண்டுகள் – 2
- எலுமிச்சம் பழச்சாறு – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- ரீபைண்ட் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
1. முட்டைக்கோசையும், பச்சை மிளகாயையும் பொடியாக அரியவும். பன்னீரை துருவிக் கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
2. முட்டைக்கோசுடன், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய், பன்னீர் சேர்த்து பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து மசித்துப் போடவும். தொடர்ந்து எலுமிச்சம் பழச்சாறு, தேவையான உப்பு சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை ரொட்டித் தூளில் புரட்டி எடுக்கவும்.
3. வாணலியில் ரீபைண்ட் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இது தக்காளி, சில்லி சாஸுடன் சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.