அனைவரின் வீட்டிலும் முன்னணி மின் சாதனங்களில் ஒன்றுதான் இந்த பிரிட்ஜ். இந்த பிரிட்ஜில் ஏராளமான பொருட்களை நாம் வைத்து யூஸ் பண்ணுகிறோம். ஏன் வெட்டி வைத்த காய்கறிகள் சற்று அதிகமானால் கூட அதை பிரிட்ஜில் வைத்து மறுநாளோ இல்லது அதற்கு மறுநாளோ யூஸ் பண்ணுகிறோம். காய்கறிகள் பழங்கள் உணவுப் பொருட்கள் ஸ்நாக்ஸ் பூ பால் மாவு போன்ற பல வகையான பொருட்களை ஃப்ரிட்ஜில் தான் வைக்கின்றோம். ஆனால் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாத பொருட்களும் சிலை இருக்கின்றன. தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பூண்டு போன்றவைகளை ஒருபோதும் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. இந்த வகையில் நாம் அனைவரின் வீட்டின் பிரிட்ஜிலும் முட்டை ராக் என்று பிரிட்ஜில் தனியாகவே ஒன்று உள்ளது அதில் கண்டிப்பாக முட்டை இருந்து கொண்டே தான் இருக்கும். இவ்வாறு பிரிட்ஜில் முட்டையை வைத்து யூஸ் பண்ணலாமா பண்ண கூடாதா என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். ஒருபோதும் ஃப்ரிட்ஜில் முட்டையை வைக்கக் கூடாது ஏனென்றால் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா தான் இதற்கு காரணம். இந்த பாக்டீரியா விலங்குகளின் குடலில் வாழக்கூடிய ஒரு வகை நல்ல பாக்டீரியா. ஆனால் இது விலங்குகளின் உடலை விட்டு வெளியே வந்து விட்டால் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த பாக்டீரியா முட்டையின் மேல் ஓட்டிலும் உட்பகுதியிலும் இருக்கிறது. நாம் பிரிட்ஜில் முட்டையை வைப்பதன் மூலம் அந்த பாக்டீரியா அப்படியே தான் இருக்கப்போகிறது. முட்டையை வெளியில் வைத்தாலும் இந்த பாக்டீரியா அதில் இருக்கும். நாம் பிரிட்ஜில் முட்டையை வைக்க நிர்ணயிப்பதே இந்த பாக்டீரியா தான். ஏனென்றால் ஃப்ரிட்ஜில் மூட்டையை வைப்பதால் இந்த பாக்டீரியா முட்டைக்கோஸ் செல்லாமல் இருக்குமே தவிர செத்து விடாது. இந்த பாக்டீரியா பிரிட்ஜில் வைத்தாலும் சரி முட்டையை வெளியே வைத்தாலும் சரி கண்டிப்பாக முட்டையின் ஓட்டில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். முட்டையை வேகவைத்து அல்லது பொரித்து சாப்பிடும் போது இந்த பாக்டீரியா இறந்து விடுமாம். முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பதால் ஏழு முதல் 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இதுவே வெளியில் வைத்து சாப்பிட்டால் 3 முதல் நான்கு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். எனவே அனைவரும் முடிந்த அளவிற்கு முட்டையை வெளியில் வைத்து சாப்பிட பழகுங்கள்.




