முட்டை குழம்பை விரும்பாதவர்கள் எவரும் இல்லை அப்படி இருக்க முட்டை குழம்பின் சமையல் குறிப்பினை தெரிந்து கொள்வோம்..
முட்டை குழம்பு செய்வதற்கான தேவையான பொருள் முட்டை 5, பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, இஞ்சி பூண்டு விழுது இரண்டு ஸ்பூன், தேங்காய் பால் ஒரு கப், தனியா தூள் ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் அரை ஸ்பூன், சீரகத்தூள் 1/2 ஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டேபிள் ஸ்பூன், கரம் மசாலா பொடி 1/4 ஸ்பூன், பட்டை ஒன்னு, கிராம்பு ரெண்டு, ஏலக்காய் 2, எண்ணை தேவைக்கேற்ப, உப்பு தேவைக்கேற்ப, முட்டை குழம்பு வைப்பதற்கான செய்முறை முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும், பின் ஒரு வாணலியில் என்னை ஊற்றி பட்டை ஏலக்காய் கிராம்பு போன்றவற்றை சேர்த்து வதக்க வேண்டும், பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நான்கு வதக்கவும் நன்கு வதக்கிய பின் அத்துடன் சீரகத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு வதக்க வேண்டும், சிறிது நேரம் கழித்து தேங்காய்ப்பால் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும், குழம்பு நன்கு கொதித்த பிறகு உப்பு சுவை பார்த்து பின் அடுப்பை சிம்மில் வைத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி ஐந்து நிமிடம் தட்டை வைத்து மூடிவிட வேண்டும், இப்போது சுவையான ஈஸியான முட்டை குழம்பு ரெடி. இந்த குழம்பு சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்..!!




