முட்டை பிரியரா நீங்கள்..? முட்டையை இவ்வாறு மட்டும் சாப்பிடாதீங்க முழு விவரம் உள்ளே..!!

முட்டை பிரியர் பலருக்கு முட்டையை பலவிதமாக சமைத்து சாப்பிடுவதற்கு மிகவும் விருப்பமுடையவராய் இருப்பார்கள். அதிலும் ஆப்பாயில் என்றால் முட்டை பிரியர்கள் அனைவருக்கும் ஒரு அலாதி பிரியம் இருக்கும்.

சிலருக்கு முட்டை இருந்தாலே போதும் அதை வைத்து இரண்டு தட்டு சாப்பாட்டையும் சாப்பிடுவாங்க, முட்டையில் பல்வேறு வெரைட்டிகள் இருக்கும் புல் பாயில், ஆஃப் ஆயில், கலக்கி, அவிச்ச முட்டை  இப்படி சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால் ஒரு சில பேருக்கு முழுசா வெக வைக்காமல் சாப்பிடறதில்ல நிறைய தீமைகள் வரும்.  அதில் ஒன்றுதான் முட்டை இப்போ துரித உணவகங்களில் கிடைக்கின்ற மயோனைஸ் என்கின்ற ஒரு சாஸ் வகையில் பச்சை முட்டைதான் அதிகப்படியாக பயன்படுத்துகிறார்கள்.

அது உடல் நலத்திற்கு அவ்வளவு நல்லது இல்லை என ஆய்வு பூர்வமாக நிரூபித்துள்ளனர். அந்த வரிசையில் தற்பொழுது ஆஃப் ஆயில் அதிக அளவில் உண்டாலும் அதன் பின் விளைவுகள் அதிகமாகி வருவதற்கு வாய்ப்பு உள்ளது.சால்மோனேல்லா என்னும் பாக்டீரியா முழுமையாக சமைக்கப்படாத முட்டையில் உள்ளது. அதனை சரியாக வேக வைக்காமல் நாம் சாப்பிடும் பொழுது பாக்டீரியா நாம் உடலில் நுழைந்து வாந்தி, ஜுரம், வயிற்று வலி ஆகிய உடல்நல கோளாருகளை ஏற்படுத்துகின்றது, சில சால்மோனேல்லா  டைபாய்டு போன்ற அதிதீவிர காய்சலையும் ஏற்படுத்த கூடியதாகும், எனவே இவ்வகையான பாக்டீரியா தொற்றுக்களை குறைக்க உணவை நன்றாக வேக வைத்து சமைத்து சாப்பிடுவது நன்று.

Read Previous

‘PCOS’ பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா.? இந்த டீ தயார் செய்து குடித்து பாருங்கள்.!!

Read Next

நாளை வெளியாகும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்..!! முக்கிய தொகுதியாய் கவனிக்கப்படும் கோவை வெற்றி யார் பக்கம்.? கருத்துக்கணிப்புகள் நிலவரம் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular