முட்டை வெகு சீக்கிரமாக கெட்டுப் போகாமல் இருக்க இதை செய்யுங்கள் போதும்..!! அசத்தல் டிப்ஸ் இதோ..!!

முட்டை என்பது நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகித்து வரும் ஒரு உணவாகும். இதை சாப்பிடுவதில் பலர் கவனம் கொடுத்து வருகின்றனர். ஆனால் இந்த முட்டையை அளவுக்கு அதிகமாக வாங்கி வெகு நாள் வைத்து உபயோகிப்போர் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி வைக்கப்பட்டிருந்தால் விரைவில் கெட்டுப்போக வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இப்படி கெட்டுப்போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

கடையிலிருந்து முட்டையை வாங்கி வரும்போது அதை குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்க வேண்டும். அப்படி செய்தால் நீண்ட காலத்திற்கு அது கெட்டுப் போகாமல் இருக்கும். கடைகளுக்கு சென்று முட்டைகளை வாங்கும் போதே சால்மோனெல்லா என்ற தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியே எடுத்த உடனே முட்டையை பயன்படுத்தக் கூடாது. அரை மணி நேரம் ஆவது வெளியில் வைத்த பிறகுதான் அதை சமையலுக்கு உபயோகிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் முட்டையே ஈரப்பதம் இல்லாத இடங்களில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். இப்படி எல்லாம் செய்தால் முட்டை வெகு நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.

Read Previous

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் நிச்சயமாக பார்க்க வேண்டிய பதிவு..!!

Read Next

இட்லியை இப்படி செய்தால் யாருதான் சாப்பிடாமல் இருப்பார்கள்..!! சுவையான செய்முறை இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular