
தமிழகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகின்றது. வருகின்ற 22 ஆம் தேதி அன்று தமிழகத்தில் அமைச்சரவை கூடுகிறது.
இந்த கூட்டம் காலை 10:30 மணி அளவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் ஆளுநரின் செயல்பாடு அமலாக்கத் துறை நடவடிக்கைகள் மற்றும் மகளிர் உரிமைத் தொகை போன்ற விவரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி புலன் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் மற்றும் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்க துறையினர் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் தமிழக அமைச்சரவை கூடுவது குறிப்பிடத்தக்கது.