இந்தியாவில் நாம் அனைவருக்கும் தெரிந்தமுக்கிய பல்கலைக்கழகத்தில், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகமும் ஒன்று. அண்ணா பல்கலைக்கழகத்தின் தலைமையிடம் சென்னையில் உள்ள கிண்டியில் அமைந்திருக்கிறது. இதன் துணைப் பல்கலைக்கழகம் சென்னையில் குரோம்பேட்டையில் அமைந்திருக்கிறது. பல ஊர்களில் இருந்து பல மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்திற்கு வந்து படிக்கின்றனர். இப்பல்கலைக்கழகத்தில், பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளில் பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது.
தற்போது மாநில ரீதியான கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் உள்ள பல கல்லூரிகள் தரவரிசையில் இடம் பெற்றுள்ளன. அதில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மேலும், மத்திய அரசின் பட்டியலில் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் 8 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.