
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பெரியார்யல் பயிற்சி பட்டறை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இதன் முதல் நாள் பயிற்சி நேற்று தொடங்கியுள்ளது. இதில் இன்று கலந்து கொண்ட திராவிட கழக தலைவர் கி வீரமணி செய்தியாளர்கள் சந்தித்து பேசி உள்ளார்.
அப்பொழுது அவர் விஜய்யின் அரசியல் குறித்து பேட்டி அளித்துள்ளார் அப்போது அவர் பேசியிருப்பது “யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், நீட் தேர்வு குறித்து யார் வேண்டுமானாலும் பேசலாம். அந்த வகையில் நடிகர் விஜய்க்கும் அரசியலுக்கு வரவும் நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவிக்கவும் அனைத்து வகையான உரிமைகளும் உண்டு. விஜய் அரசியலுக்கு வருவதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை.
ஆனால் சினிமாவில் நடந்து நல்ல நடிகராக இருந்தாலே அரசியலில் ஜெயித்து விட முடியாது. எம்.ஜி.ஆர் அரசியலில் ஜெயித்தார் என்றால் அவர் திராவிட இயக்கத்தில் இருந்து வந்தார். அதனால் அரசியலில் ஜெயித்தார் நடிகராக இருந்தால் மட்டுமே எம்.ஜி.ஆர் ஜெயிக்கவில்லை என்பதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எம்ஜிஆருக்கு பின் வந்த எந்த நடிகரும் அரசியலில் ஜெயித்ததில்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கட்சி ஆரம்பிக்கும் போதே கொள்கையையும் அறிவிக்க வேண்டும் இதுதான் நடைமுறை. ஆனால் இப்போது கட்சி ஆரம்பிக்கிறேன் பிறகு கொள்கையை அறிவிக்கின்றேன் என்பது முரண்பாடாக ஒன்று. மற்றபடி விஜய் மட்டுமல்ல நல்ல கருத்தை யார் கூறினாலும் நாங்கள் வரவேற்போம்”, என்று கி வீரமணி தெரிவித்துள்ளார்.