தமிழக முதலமைச்சரின் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தமிழக மக்களுக்கு பெரும் பாதுகாப்பையும் நலனையும் தந்து வருகிறது இதனை தொடர்ந்து முதல்வரின் இலவச மருத்துவ காப்பீடு அட்டையை பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்..
தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் மக்கள் தரமான மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம், ஒரு குடும்பம் தலா 5 லட்சம் வரை மருத்துவமனையில் மருத்துவ காப்பீட்டு அட்டையை வைத்து சிறந்த மருத்துவ பரிசோதனையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு கூறுகிறது, முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை பெறுவது என்பது குடும்ப வருமானம் தலா ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்குள் அடங்க வேண்டும், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மருத்துவ காப்பீட்டு அட்டை பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம், மேலும் இதனை விண்ணப்பித்தன் மூலம் ஒரு மாத காலத்திற்குள் மருத்துவ காப்பீடு அட்டை தங்களது வீட்டின் முகவரிக்கு வந்து சேர்ந்துவிடும் மேலும் தகவளுக்கு இணையதளத்துக்கு சென்று அறியலாம்..!!