முதல்வர் கான்வாய் பின்னே சென்ற ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பலி..!!
சென்னை காமராஜர் சாலையில் முதல்வர் கான்வாய் சென்ற பாதையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஆட்டோவில் பயணித்த 5 வயது சிறுவன் விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முதலமைச்சர் செல்வதற்காக காமராஜர் சாலையில் கான்வாய் பாதுகாப்பு போலீஸாரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கவனிக்காமல் வந்த ஆட்டோ ஓட்டுநர் சிக்னல் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்று வேகமாக ஆட்டோவை இடது புறம் திருப்பியதில் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கிழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.