முதல் இடத்தை இழந்த பிரபல சீரியல்..!! இந்த வார டாப் 10 சீரியல்களின் TRP நிலவரம் என்ன?..

இன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்கில் ஒரு அங்கமாக இருப்பது சீரியல் தான். வீட்டில் இருப்பவர்கள் மட்டுமின்றி வேலைக்கு செல்பவர்களும் தொடர்ந்து பார்க்கும் சீரியல்கள் பல இருக்கின்றன. அந்த வகையில் TRP யின் அடிப்படையில் இந்த வார டாப் 10 சீரியல்களில் எந்த சீரியல்கள் முன்னிலை வகிக்கின்றன என்பதை கீழே விரிவாக காண்போம்.

அதாவது, கடந்த சில வாரங்களாகவே முதல் இடத்தில் சன் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் கயல் சீரியல் இருந்த நிலையில், தற்போது சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியல் 10.45 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளது. மேலும், 10.41 புள்ளிகளை பெற்று சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திலும், 10.23 புள்ளிகளை பெற்று கயல் மூன்றாவது இடத்திலும் உள்ளது. 9.89 புள்ளிகளை பெற்று 4 வது இடத்தில் கடந்த வாரம் முடிந்த சுந்தரி சீரியலும், 9.16 புள்ளிகளை பெற்று 5 வது இடத்தில் மருமகள் சீரியலும், 9.11 புள்ளிகளை பெற்று 6 வது இடத்தில் ராமாயணம் சீரியலும் இடம்பிடித்துள்ளது. மேலும், இதற்கடுத்ததாக விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 8.05 புள்ளிகளில் 7 வது இடத்திலும், 7.09 புள்ளிகளில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 8 வது இடத்திலும், 6.68 புள்ளிகளில் பாக்கியலட்சுமி 9 வது இடத்திலும் உள்ளது. கடைசியாக 6.67 புள்ளிகளில் ஆஹா கல்யாணம் சீரியல் 10 வது இடத்தை பிடித்துள்ளது.

Read Previous

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் மாற்றம்..!! பாகிஸ்தான் விதித்த புதிய நிபந்தனை..!!

Read Next

ஆரம்பத்திலேயே வயிற்று புற்று நோயை கண்டறியும் அறிகுறிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular