நாமக்கல் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக சர்வம் கல்வி அறக்கட்டளையானது பல சமூக சேவைகளை செய்து வருவது மட்டுமல்லாமல் ஏழை எளிய மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு தேவையான உதவி தொகைகளை தந்து ஊக்கம் தந்து வருகிறது, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே முதல் மதிப்பெண் எடுத்த மாணவிக்கு கழிப்பறை கட்டுவதற்கு பூமிப் பூஜை செய்துள்ளனர்…
நாமக்கல் மாவட்டம் வடுகபட்டி கிராமத்தில் பிளஸ் டூவில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி தீபாவை பாராட்டும் வகையில் அவரது வீட்டில் கழிப்பிட வசதி இல்லாததை அறிந்து நாமக்கல் சர்வம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் ரம்யா ராதாகிருஷ்ணன் அவர்கள் தீபாவின் இல்லத்திற்கு சென்று கழிப்பறை கட்டுவதற்கு நேற்று (ஆக:27) பூமி பூஜை பணியை தொடங்கினர், இந்த நிகழ்விற்கு நல்லோர் வட்டத்தின் மாநில வழிகாட்டி சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் சர்வம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் திருமதி ரம்யா ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பாக நடத்தினர் மேலும் அறக்கட்டையில் செயலாளர் மீனா கரிகாலன் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு இந் நிகழ்வை வரவேற்றனர்..!!