முதல் மனைவியால் மரணித்த வாழ்க்கை இரண்டாவது மனைவியால் உயிர் பெற்ற விந்தை ; படித்ததில் பிடித்தது..!!

வயது 30 நெருங்கியும் தவமிருந்து பெற்ற தன் மகனுக்கு பொருத்தமான பெண் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் தனி ஆளாக பிள்ளையை வளர்த்த அம்மாவுக்கு அதிகம். வெளியில் சொல்லும்போது தனக்கு தம் தெரிந்தவர்களை பார்க்கும்போதெல்லாம் நல்ல பெண்ணா உங்களுக்கு யாராவது தெரிஞ்சா என் மகனுக்கு சொல்லுங்க என சலிக்காமல் சொல்வார்…

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து கையோடு இரண்டாண்டுகள் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த பின் சொந்தமாக தனுடன் வேலை பார்த்தவரோடு சேர்ந்து பார்ட்னர்ஷிப்பில் ஒரு சிறிய பேக்டரி தொடங்கும் ஆசியை மகன் சொன்ன போது தன் நகைகளை கொடுத்து நீ பார்த்து செஞ்சா சரியா தான் இருக்கும் என பச்சை கொடி காட்டினார்..

ஒரு நாள் என்னடா நீயே உனக்கு ஒரு பெண்ணை பார்த்துக்க கூடாதா யாராவது தெரிஞ்சவங்க என்ன பார்த்தாலே அய்யோ இவங்க மகனுக்கு பொண்ணு பார்க்க சொல்லிடுவாங்களேன்னு பயந்து தலை தெறிக்க ஓடுறாங்க என வெளிப்படையாக கொஞ்சம் வேதனையோடு சொன்னால். எனக்கு வீட்டை விட்டா ஃபேக்டரி ஃபேக்டரிய விட்டா வீடு இப்படியே என் வாழ்க்கை போகுதம்மா நீயே ஒரு நல்ல பொண்ணா பார்த்து பேசி கல்யாணம் பண்ணி வை அப்படின்னு மகன் சொன்னான். சிறிது காலம் அப்படியே சென்றது மகனுக்கு ஏற்றார் போல் ஒரு மருமகளை மகளாக தேர்ந்தெடுத்து தனது மகனுக்கு மணமுடித்தால் தாய். மணமுடித்த சிறிது நாட்களிலேயே தாய் நோய் வாய் பட்டு இறக்க நேரிட்டது. அந்தத் தாயின் இறப்பிற்கு அவனின் முதல் மனைவியும் ஒரு காரணமே கணவரின் தாயை ஒரு அன்னையாக பாராமல் வேலைக்காரி போல் நடத்தியதன் காரணமாக அவளின் மன உளைச்சல் மற்றும் சரியான நேரத்தில் உணவு இல்லாத காரணத்தினால் கூட அவள் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிட்டது இந்த தாயின் இறப்பினால் மகன் தனது மனைவியை பிரிந்து வாழ நேர்ந்தது. வீடு வீடை விட்டால் ஃபேக்டரி என்ற வாழ்க்கை வாழ்ந்தவன் தாய் சென்ற பிறகு வீட்டில் பக்கம் கூட வருவதில்லை. சாராயக் கடை பக்கத்திலேயே குடியிருந்தான் இதனை கண்ட அவனது பள்ளி பருவ தோழி அவள் பள்ளியில் படிக்கும் போதே அவன் மீது காதல் வயப்பட்டு இருந்தால் ஆனால் அவள் கூற மறுத்து விட்டால். இப்போது அவனை குடிபோதையில் இருந்து மீட்டு அவனிடம் தனது காதலி தெரிவித்து திருமணம் செய்து கொள்ள முன்வந்தால். அவனுக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை இருந்தும் தனக்கு நடந்த எல்லா உண்மைகளையும் எடுத்துரைத்தான். அவள் மீண்டும் தான் உன்னை காதலிக்கிறேன் என்பதை தெளிவாக கூறியதன் பிறகு இருவரும் கோயிலில் நான்கு பேர் முன்னிலையில் திருமணம் செய்து திருமண வாழ்க்கையை தொடங்கினர் முதல் மனைவியால் மரணித்த தாய்க்கு பிறகு இரண்டாவது வாழ்க்கை தனக்கு உயிர் தந்தது என்று தனது மனைவி மீது பாசம் காட்டி வாழ்க்கையை அழகாக கடந்தான். இப்போது அவனுக்கு இரண்டு குழந்தைகள் குடும்பங்கள் என சந்தோசமாக வாழ்கின்றான். முடிந்தவரை பெண் பிள்ளைகளிடம் சொல்லித் தாருங்கள் நீ மணமுடித்து செல்லும் வீட்டில் உன் கணவரின் தாய் தந்தையை உன் தாய் தந்தையாக பார்க்க வேண்டும் என்று இப்படி இருந்தால் எந்த குடும்பத்திலும் சண்டை சச்சரவே இருக்காது.!!

Read Previous

நரம்பு பிரச்சினையை சரி செய்ய உதவும் ஐந்து உணவுகள் அவசியம் அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

கணவன் மனைவிக்கு இடையே எத்தனை வயது வித்தியாசம் இருக்க வேண்டும்?.. அறிவியல் தரும் விளக்கம் என்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular