உங்களுக்கு பிடித்த நபருடன் நீங்கள் டேட்டிங் செல்லும்போது சிலவற்றை நீங்கள் பேசிவிடக்கூடாது..
அவர்களின் கடந்த கால உறவுகள் பற்றியும் பழைய காதல் குறித்தும் நீங்கள் பேசக்கூடாது அது அவர்களுக்கு சங்கடமான நிலையை ஏற்படுத்தும். நீங்கள் முதல்முறையாக உங்கள் அன்புக்குரிய வரை சந்திக்கும் போது சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்சினைகள் பற்றி விவாதம் செய்யக்கூடாது. முதல் சந்திப்பில் உங்கள் அன்புக்குரியவரிடம் பேசும் போது அவர்கள் எந்த மதம் என்று கேட்பதோ இல்லை ஆழமான மத விவாதங்களை முன்வைப்பதோ கூடாது. கடன் சம்பளம் அல்லது செலவு பழக்கவழக்கம் பற்றி முதல் சந்திப்பில் உங்கள் அன்புக்குரியரிடம் பேசக்கூடாது. முதல் சந்திப்பிலேயே நீண்ட கால திட்டங்களை பேசுவது நல்லது அல்ல திருமணம் மற்றும் குழந்தைகள் குறித்து பேசுவதற்கு சிறிது காலம் தேவைப்படும். உங்கள் அன்புக்குரியவருடன் முதல் சந்திப்பில் நாள்பட்ட நோய்கள் அல்லது உங்கள் உடல் நல பிரச்சனைகளை பற்றி கூறுவதை தவிர்க்க வேண்டும் சரியான நேரம் காலம் அமையும் போது இவை குறித்து பேசலாம். மேலும் உங்கள் முதல் சந்திப்பில் ஆரோக்கியமான நினைவுகளை உருவாக்குங்கள் அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள் ஒருவர் கூறுவர் உறுதுணையாக இருங்கள் இதன் மூலம் உங்கள் முதல் சந்திப்பில் நல்ல நினைவுகள் சேரும்..!!