இரவு நேரத்தில் முதியவர்கள் ஆரோக்கியமான முறையில் தூங்க வேண்டும் என்றால் சில வழிகள் உண்டு அவற்றை கையாளும் பொழுது இரவு நேரத்தில் முதியவர்கள் ஆரோக்கியமான தூக்கத்தை பெறுகிறார்கள்..
திரவ உணவு : இரவில் தூங்கும் முன் பால் காப்பி மற்றும் டீ இது போன்ற திரவ பானங்கள் குடிக்க கூடாது இதனால் பெரியவர்களின் தூக்கம் கெடுகிறது. முதியவர்கள் பகலில் 30 நிமிடம் மட்டுமே தூங்கினால் போதும் அளவுக்கு அதிகமாக தூங்கும் பட்சத்தில் இரவு தூக்கம் கெட்டுவிடும். இரவில் தூங்கும் முன் மனதை அமைதிப்படுத்தி சிறிது நேரம் கழித்து தூங்க வேண்டும் மனம் அமைதியாக பட்டால் தூக்கம் இயல்பாக வந்துவிடும். மிதமான வெந்நீரில் காலையில் குளிப்பது நல்லது இதனால் முதியவரின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது. நடைப்பயிற்சி மற்றும் யோகா போன்ற தியான பயிற்சி மேற்கொள்ள வேண்டும் இதனை மேற்கொள்ளும் பொழுது பெரியவர்களின் வாழ்க்கை ஆரோக்கியமாகவும் அமையும். தொலைக்காட்சி மற்றும் அலைபேசி பார்ப்பது முற்றிலும் தவிர்க்க வேண்டும் இல்லையென்றால் பெரியவர்களின் கண்பார்வை பாதிக்கப்படும் மேலும் இரவு நேரம் தூங்குவதில் சிரமம் ஏற்படும். முதுமை பருவத்தில் குறைந்தது 5 மணி நேரம் தூக்கம் போதுமானது…!!