
முதுமையை தாமதப்படுத்தி இளமையை தக்க வக்க கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவற்றை சம அளவாக எடுத்து உலர்த்தி பொடி செய்து 3 கிராம் வெந்நீரில் காலை மாலை சாப்பிடவும். இவ்வாறு சாப்பிட்டால் குடல் இயக்கத்தை சீராக்கி செரிமான கோளாறுகளை நீக்கி மலம்மிளக்கியாக செயல்படுகின்றது. வயிற்றுப்புண்ணை ஆற்றும் அல்சரை கட்டுப்படுத்தும் இறந்த சோகையை சரி செய்கிறது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது உடலில் குளுக்கோஸின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் உடல் பருமனை குறைத்து சீரான உடல் எடையை பெற செய்யும் மூச்சு குழாயில் உள்ள அடைப்பை நீக்கி சுவாச பாதையில் உள்ள சளியை நீக்கி சீரான சுவாசத்தை ஏற்படுத்தும். தொடர்ந்து சாப்பிட்டு வர முதுமையை தாமதப்படுத்தி இளமையை தக்க வைக்கும்.